கன்னியாகுமரி
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|ராஜாக்கமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜாக்கமங்கலம்:
ராஜாக்கமங்கலம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அரசர் கோணம் பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி மனைவி ராதா (வயது62). இவர்களுடைய மகன் ராதாகிருஷ்ணன். இவருடைய மனைவி சந்திரகலா. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ராதாவுக்கும், சந்திரகலாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்து கொண்டு சந்திரகலா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை நேற்று முன்தினம் ராதா தனது மகனிடம் மருமகளை அழைத்து வர கூறி உள்ளார். அதன்படி ராதாகிருஷ்ணன் மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்தநிலையில் அன்று இரவு ராதா அருகில் உள்ள மகள் வீட்டிற்கு தூங்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு செல்லாமல் வீட்டின் அருகே உள்ள தென்னை மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ராதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.