கன்னியாகுமரி
மார்த்தாண்டம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|மார்த்தாண்டம் அருகே குடும்ப பிரச்சினையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே குடும்ப பிரச்சினையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆட்டோ டிரைவர் மனைவி
மார்த்தாண்டம் அருகே உள்ள கீழகாஞ்சிரகோடு பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் (வயது36), ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி பெயர் மரியநீது (33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மரியநீது மனமுடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று காலையில் கிறிஸ்துராஜ் பக்கத்தில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றார். குழந்தைகள் 2 பேரும் வீட்டில் விளையாடி கொண்டிருந்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் மரியநீது மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கிறிஸ்துராஜ் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்த போது மனைவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குடும்ப பிரச்சினையால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.