< Back
மாநில செய்திகள்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
தர்மபுரி
மாநில செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
12 Aug 2023 12:15 AM IST

தர்மபுரி வெண்ணாம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 34). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவியிடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று விஜயலட்சுமி வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்