< Back
மாநில செய்திகள்
பெண் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பெண் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
5 July 2023 12:15 AM IST

இனயம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

புதுக்கடை:

இனயம் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தயார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

குடும்பத்தகராறு

தேங்காப்பட்டணம் அருகே உள்ள இனயம் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஆன்டணி ததேயூஸ், மீனவர். இவருக்கும் குறும்பனையை சேர்ந்த பேபி ஷாலினி (வயது27) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

தூக்கில் தொங்கினார்

இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு ஆன்டணி ததேயூஸ் தனது 2 மகள்களையும் அழைத்துக்கொண்டு கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் மகள்களுடன் ஆன்டணி ததேயூஸ் வீட்டுக்கு திரும்பினார். அப்போது மனைவி பேபி ஷாலினி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மகள்கள் இருவரும் தாயாரின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுபற்றி புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் புதுக்கடை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேபி ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சாவில் சந்தேகம்

இதற்கிடையே பேபி ஷாலினியின் தாயார் மேரி ஸ்டான்லி புதுக்கடை போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார். அந்த மனு மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்