< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
அருமனை அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை
|8 March 2023 3:15 AM IST
அருமனை அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அருமனை:
அருமனை அருகே உள்ள சிதறால் பினாக்காலவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின் செல்வராஜ். இவருடைய மனைவி ஷீபா (வயது 44). இவர்களுக்கு சஜின் என்ற மகனும், சர்மிளா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரிகளில் படித்து வருகிறார்கள். ஷீபாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஜஸ்டின் செல்வராஜ் அவருடைய சகோதரியுடன் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழாவுக்கு சென்றார். மகனும், மகளும் கல்லூரிக்கு சென்றனர். இந்த நிலையில் வீட்டு அறையில் உள்ள மின்விசிறியில் ஷீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலையில் வீடு திரும்பிய செல்வராஜ் இதுபற்றி அருமனை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.