< Back
மாநில செய்திகள்
சென்னை புழல் சிறையில் பெண் கைதி தூக்குப்போட்டு தற்கொலை..!
மாநில செய்திகள்

சென்னை புழல் சிறையில் பெண் கைதி தூக்குப்போட்டு தற்கொலை..!

தினத்தந்தி
|
22 Oct 2023 8:49 AM IST

சென்னை புழல் சிறையில் பெண் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை,

நகை திருட்டு வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மீனாட்சி என்கிற காந்திமதி (50) தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து சிறைக் காவலர்கள் காந்திமதியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமின் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உறுதி பத்திர எழுதி தர வராததால், மனமுடைந்த காந்திமதி தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. பெண் கைதி தற்கொலை குறித்து புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜீயர்புரத்தில் மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் காந்திமதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்