< Back
மாநில செய்திகள்
புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பியோட்டம்
மாநில செய்திகள்

புழல் சிறையில் இருந்து பெண் கைதி தப்பியோட்டம்

தினத்தந்தி
|
14 Dec 2023 2:16 AM IST

மாலையில் கைதிகள் பதிவேட்டை சரிபார்த்த சிறை போலீசார், ஜெயந்தி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

செங்குன்றம்,

கர்நாடகம் மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அஜய் பாபு என்பவரது மகள் ஜெயந்தி (32). இவர், சென்னை செம்மஞ்சேரியில் வசித்து வந்தார். இந்தநிலையில் 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில் துரைப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று மாலை 5 மணியளவில் பார்வையாளர்கள் அறை அருகே இருந்த நுழைவாயிலில் வழியாக ஜெயந்தி நைசாக தப்பிவிட்டார். மாலை 5.30 மணியளவில் கைதிகள் பதிவேட்டை சரிபார்த்த சிறை போலீசார், ஜெயந்தி மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது ஜெயந்தி சிறையில் இருந்து தப்பித்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்