< Back
மாநில செய்திகள்
போக்குவரத்து போலீஸ்காரரின் மனைவி அவதூறாக பேசியதால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி..!
சென்னை
மாநில செய்திகள்

போக்குவரத்து போலீஸ்காரரின் மனைவி அவதூறாக பேசியதால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி..!

தினத்தந்தி
|
23 May 2022 11:49 AM IST

பூந்தமல்லியில் போக்குவரத்து போலீஸ்காரரின் மனைவி அவதூறாக பேசியதால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பூந்தமல்லி:

சென்னை, பூந்தமல்லியில் உள்ள காவலர் குடியிருப்பில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் பூந்தமல்லியில் போக்குவரத்து போலீசாக பணிபுரிந்து வரும் பாபுஜி அவரது மனைவி பானுமதியுடம் வசித்து வருகிறார். அவரது குடியிருப்பு பகுதியிலேயே பூந்தமல்லி காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணி புரிந்துவரும் அமுதா (வயது 36) என்பவரும் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது குடியிருப்பின் அருகே சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது போக்குவரத்து போலீஸ்காரரின் மனைவி பானுமதி கீழே தண்ணீர் ஊற்றியதால் அதில் சிறுவர்கள் வழுக்கி கீழே விழுந்ததில் ஒரு சிறுவனுக்கு காயம் அடைந்துள்ளான்.

இதுகுறித்து தட்டிக்கேட்ட அமுதாவிற்கும், பானுமதிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அமுதாவை பானுமதி தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் அமுதா வீட்டில் இருந்த பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனை கண்டதும் அவரது கணவர் அவரை பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து போலீஸ்காரரின் மனைவி அவதூறாக பேசியதால் பெண் போலீஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்