< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
நாய்கள் கடித்து குதறியதில் பெண் மயில் பரிதாப சாவு
|18 July 2022 12:26 AM IST
ஸ்ரீமுஷ்ணத்தில் நாய்கள் கடித்து குதறியதில் பெண் மயில் பரிதாப சாவு
ஸ்ரீமுஷ்ணம்
ஸ்ரீமுஷ்ணம் சேனைத்தலைவர் தெருவில், படைவெட்டி மாரியம்மன் கோவில் அருகில், நேற்று மதியம் இரை தேடி வந்த பெண் மயில் ஒன்றை சில தெரு நாய்கள் துரத்தி சென்று கடித்து குதறின. நாய்களின் பிடியில் சிக்கிய மயில் கத்தியது. இந்த சத்தத்தை கேட்டு அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் ஓடி சென்று நாய்களை துரத்திவிட்டு மயிலை மீட்டனர். ஆனால் மயிலின் கழுத்துப் பகுதியில் அதிக காயம் இருந்ததால் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மயில் பரிதாபமாக செத்தது. பின்னர் இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சிதம்பரம் வந்த வன ஊழியரிடம் இறந்த மயில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த மயிலின் உடலை புவனகிரி கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்து, வெள்ளாற்றங்கரையில் அடக்கம் செய்யப்படும் என்று வன ஊழியர் தெரிவித்தார்