< Back
மாநில செய்திகள்
தோகைமலை அருகே பெண் மாயம்
கரூர்
மாநில செய்திகள்

தோகைமலை அருகே பெண் மாயம்

தினத்தந்தி
|
18 Oct 2023 11:10 PM IST

தோகைமலை அருகே பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் கீரக்கல் மேடு பகுதியை சேர்ந்தவர் குமரவேல். இவரது மனைவி சரண்யா (வயது 22). இந்தநிலையில் கடந்த 14-ந்தேதி சரண்யா தனது தாய் வீடான தோகைமலை அருகே உள்ள தெற்கு வருந்திபட்டிக்கு வந்துள்ளார். இந்தநிலையில் மறுநாள் வீட்டில் இருந்து வெளியே சென்ற சரண்யா வெகுநேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை.

இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சரண்யாவின் சகோதரர் சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான சரண்யாவை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்