திருச்சி
பெண் என்ஜினீயர்-வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|பெண் என்ஜினீயர்-வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
துறையூர்:
என்ஜினீயர்
துறையூரை அடுத்த கோவிந்தாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். கூலி தொழிலாளி. இவரது மகள் அபிராமி(வயது 22). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் தொங்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அபிராமியை மீட்டு துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இது குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம்
தொட்டியத்தை அடுத்த சீனிவாசநல்லூர் ஊராட்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் வெங்கடேஷ் (23). இவர் எரகுடியை சேர்ந்த அபிசந்திரகலாதேவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வெங்கடேஷ் தனது தந்தை வீட்டில் இருந்து வந்தார்.
இந்நிலையில் மனைவியை பிரிந்ததால் மனவேதனையில் இருந்த வெங்கடேசன், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரசுராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.