சென்னை
தரமணியில் பெண் என்ஜினீயர் தற்கொலை
|தரமணியில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் மங்கையர்க்கரசி (வயது 26). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர், கடந்த 2 மாதத்துக்கு முன்பு சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். தரமணி தந்தை பெரியார் நகர் ராணியம்மாள் தெருவில் உள்ள தனியார் விடுதியில் தங்கி, வேலைக்கு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் தனது அறையில் மங்கையர்க்கரசி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மங்கையர்க்கரசியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி 28-வது தெருவை சேர்ந்தவர் பிரசன்னா. இவருடைய மனைவி ஜெயஸ்ரீ (29). இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. ஜெயஸ்ரீ தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் வீட்டின் படுக்கை அறையில் ஜெயஸ்ரீ தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பெரவள்ளூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 6 மாதமே ஆவதால் இதுபற்றி திருமங்கலம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.