< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு பெண் என்ஜினீயர் தற்கொலை
|8 Aug 2023 1:32 AM IST
திருவோணம் அருகே தூக்குப்போட்டு பெண் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
ஒரத்தநாடு:
திருவோணம் அருகே நெய்வவிடுதி கிராமத்தை சேர்ந்த விஜய ரகுநாதன் மகள் பிரியதர்ஷினி (வயது23). என்ஜினீயர். இவரது அக்காள் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். தனது அக்காள், கணவரை பிரிந்து தாயார் வீட்டில் வாழ்ந்து வருவதால், பிரியதர்ஷினி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத போது பிரியதர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்த புகாரின் பேரில் வாட்டாத்திக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது அக்காள் கணவருடன் வாழாமல் தாயார் வீட்டில் வசித்து வந்ததால் மனவேதனையில் பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.