நாமக்கல்
பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
|மோகனூர் ஊராட்சி ஒன்றியம், அரூர் ஊராட்சி, நத்தமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு பேசினார்.
மோகனூர்
பெண் கல்விக்கு முக்கியத்துவம்
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றியம், அரூர் ஊராட்சி, நத்தமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்துகொண்டு பேசினார்.
கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசும்போது:-
வாக்காளர் பட்டியலில், ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை இணைக்காத பொதுமக்கள் அனைவரும் கிராம நிர்வாக அலுவலகத்தில், உரிய படிவத்தில் கையொப்பமிட்டு, ஆதார் அட்டை நகல் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். தற்போது நடந்த கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருட்கள் மீது, சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்ட பணிகள், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப்பகுதியில் மழைநீர் சேகரிப்பு அமைப்பில் ஏற்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு,
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், நாமக்கல் வருவாய் கோட்டாச்சியர் மஞ்சுளா, மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், பஞ்சாயத்து உதவி இயக்குனர் கலையரசு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், முனியப்பன், (வட்டார ஊராட்சி) தேன்மொழி, (கிராம ஊராட்சி) அரூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வமணி பெரியண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் செங்கப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நந்தகுமார், கே.புதுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னம்மாள் மணி, மணப்பள்ளி ஊராட்சி இந்துமதி சின்னத்தம்பி, ராசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம், வளையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி சண்முகம், லத்துவாடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பரமேஸ்வரி ரஜினி ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள்உள்பட பலர் கலந்துகொண்டனர்.