< Back
மாநில செய்திகள்
கிணற்றில் பெண் பிணம்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

கிணற்றில் பெண் பிணம்

தினத்தந்தி
|
8 Oct 2023 12:56 AM IST

பனப்பாக்கம் அருகே கிணற்றில் பெண் பிணமாக கிடந்தார்.

காவேரிப்பாக்கம்

பனப்பாக்கம் அருகே மேலபுலம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி ராணி (வயது 55). இவர் கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சர்க்கரை நோய்க்கு மருந்து, மாத்திரைகள் வாங்க கணவரிடம் பணம் கேட்டதாகவும் அதற்கு அவர் இல்லை என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த ராணி வீட்டிலிருந்து வெளியே போனவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ராமாபுரம் பகுதியில் உள்ள கிணற்றில் ராணி பிணமாக மிதந்ததை கண்ட அங்கிருந்தவர்கள் அவளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்