< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
ஆற்றில் பெண் பிணம்
|6 Jan 2023 12:45 AM IST
பழனி அருகே மானூர் சண்முகநதி ஆற்றில் பெண் ஒருவர் பிணமாக மிதந்தார்.
பழனி அருகே உள்ள மானூர் சண்முகநதி ஆற்றில் அணைக்கட்டு உள்ளது. இங்கு மானூர் சுற்றுப்பகுதி மக்கள் என பலரும் வந்து குளிப்பது வழக்கம். நேற்று அணைக்கட்டு பகுதியில் நீரில் பெண் பிணம் ஒன்று மிதந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக கீரனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பழனி தீயணைப்பு படையினர் உதவியுடன் பிணத்தை மீட்டனர். தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்ணீரில் இறந்து கிடந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, குளித்தபோது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.