< Back
மாநில செய்திகள்
அண்ணா விளையாட்டு அரங்கில் மரங்கள் வெட்டி கடத்தல்
திருச்சி
மாநில செய்திகள்

அண்ணா விளையாட்டு அரங்கில் மரங்கள் வெட்டி கடத்தல்

தினத்தந்தி
|
3 Jun 2023 1:52 AM IST

அண்ணா விளையாட்டு அரங்கில் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன.

திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு மாவட்ட, மாநில அளவிலான தடகளம் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இங்கு பல்வேறு விளையாட்டுக்களுக்கான வசதிகளும் உள்ளன. மேலும், விளையாட்டு அரங்க வளாகத்தில் நிழல்தரும் வகையில் பல்வேறு வகையான மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்தநிலையில் அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதி முன்பு வீரர்களுக்கு நிழல் தரும் வகையில் நட்டு வைத்து பராமரிக்கப்பட்டு வந்த சிறு, சிறு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளனர். முறைப்படி மாவட்ட கலெக்டரிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்டவிரோதமாக மரங்கள் அங்கிருந்து வெட்டி கடத்தப்பட்டு இருப்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்