< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு
|16 Oct 2022 9:29 AM IST
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது
சென்னை,
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது.அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம்ரூ.4.3 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்தில் இருந்துரூ .13.5 லட்சமாக ய=உயர்ந்திருக்கிறது.வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான, ஆண்டு கட்டணம் ரூ .23.5 லட்சத்தில் இருந்து ரூ.24.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதன்படி தமிழகத்தில் இருக்கிற 18 மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்ட்டுள்ளது.
'