புதுக்கோட்டை
வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
|வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பில் ஆலங்குடி கோர்ட்டு வளாகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில துணை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். அசோகன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றை முற்றிலும் அகற்றிவிட்டு வக்கீல்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நலன்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவரும் புதிய குற்றவியல் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் பரிசுத்தநாதன், ராஜசேகர், அழகன், சிவா, மகாலிங்கம், ரத்தினம் மற்றும் புதுக்கோட்டை, கீரனூர், அறந்தாங்கி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.