< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை மாநகராட்சியின் பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் - சாலைப் பணிகள் உள்பட 73 தீர்மானங்கள் நிறைவேற்றம்
|2 March 2023 10:39 PM IST
துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு மாநகராட்சி கூட்டத்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை,
சென்னை மாநகராட்சியின் மேயர் பிரியா ராஜன் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா ராஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் 74 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்திருந்த நிலையில், 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் முக்கியமானதாக 844 நவீன பேருந்து நிழற்குடைகளை புனரமைத்தல், பல்வேறு சாலைப் பணிகள் உள்ளிட்டவை அடங்கும்.