< Back
மாநில செய்திகள்
சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரெயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு
மாநில செய்திகள்

சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரெயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு

தினத்தந்தி
|
31 Aug 2023 4:16 PM IST

சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரெயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தலைநகர் சென்னையில் முதல்கட்டமாக 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் சேவை செயல்பாட்டில் உள்ளது. சென்னையை போல் தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களான கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லையிலும் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை, மதுரையில் மெட்ரோ அமைப்பதற்கான ஆய்வு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சேலம், திருச்சி, நெல்லை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரெயிலுக்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சேலம், திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரெயில் சேவைக்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் இன்று சமர்ப்பித்துள்ளது. அதில் திருச்சியில் 26 கி.மீக்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீக்கு ஒரு கட்டமாகவும் 45 கி.மீ தூரத்திற்கு வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையை பொறுத்தவரை மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கான வாய்ப்பு இல்லை என்றும் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்