< Back
மாநில செய்திகள்
பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு
மாநில செய்திகள்

பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பு

தினத்தந்தி
|
4 Jan 2024 10:37 PM IST

வழித்தடத்தின் மொத்த நீளம் 43.63 கி.மீ. என சாத்தியக்கூறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

சென்னை பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் வழித்தடத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.

அந்த அறிக்கையில், இந்த வழித்தடத்தின் மொத்த நீளம் 43.63 கி.மீ. எனவும், இதில் தோராயமாக 19 நிலையங்கள் அமைக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கான மொத்த செலவு ரூ.10,712 கோடி ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்