< Back
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டை அருகேகிராமத்தில் சுற்றித்திரிந்த யானையால் பொதுமக்கள் அச்சம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தேன்கனிக்கோட்டை அருகேகிராமத்தில் சுற்றித்திரிந்த யானையால் பொதுமக்கள் அச்சம்

தினத்தந்தி
|
28 July 2023 1:00 AM IST

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்துக்குள் புகுந்து சுற்றித்திரிந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

காட்டு யானை

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த மாரச்சந்திரம் காப்புக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்தது. இந்த யானை நேற்று முன்தினம் நள்ளிரவு காட்டை விட்டு வெளியேறி அருகில் உள்ள தொட்டி கிராமத்துக்குள் புகுந்தது. இதையடுத்து அந்த யானை அங்குள்ள தனியார் அறுவை மில்லுக்குள் புகுந்து நீண்ட நேரம் அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. இதனை தொடர்ந்து காட்டு யானை ஊருக்குள் புகுந்ததை பார்த்த தெருநாய்கள் குறைக்க தொடங்கின.

கிராம மக்கள் அச்சம்

இந்த சத்தத்தை கேட்ட கிராம மக்கள் வீடுகளுக்கு வெளியே வந்தபோது காட்டு யானை சுற்றித்திரிந்ததை கண்டு அச்சம் அடைந்தனர். பின்னர் கிராம மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டி கொண்டதுடன் இரவு நேரத்தில் அச்சத்துடன் இருந்தனர். இதனை தொடர்ந்து நீண்ட நேரத்துக்கு பின்னர் காட்டு யானை கிராமத்தில் இருந்து வெளியேறி காட்டுப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்