தஞ்சாவூர்
பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்யாததால் 3 நாட்கள் மின்தடை
|கொத்தங்குடி அருகே பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்யாததால் 3 நாட்கள் மின்தடை ஏற்பட்டது. மேலும் மின்மோட்டார் இயங்காததால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
மெலட்டூர்:
கொத்தங்குடி அருகே பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்யாததால் 3 நாட்கள் மின்தடை ஏற்பட்டது. மேலும் மின்மோட்டார் இயங்காததால் குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
டிரான்ஸ்பார்மரில் பழுது
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா, கொத்தங்குடி அருகே உள்ள குண்டூர் பகுதியில் டிரான்ஸ்பாா்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரில் கடந்த 16-ந் தேதி திடீரென பழுது ஏற்பட்டது.இதனால் குண்டூர் பகுதியில் மின் தடை ஏற்பட்டது. இந்த தடையால் குடிநீர் மின்மோட்டார்கள் இயங்கவில்லை.
3 நாட்கள் மின்தடை
பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் சரி செய்யாததால் கடந்த 3 நாட்களாக குண்டூர் பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்தடை காரணமாக மின்மோட்டார் இயங்காததால் கிராம மக்கள் குடிக்கவுக்கும், குளிப்பதற்கும் தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் பகலிலும், இரவிலும் மின் விசிறி இன்றி வீட்டில் இருக்க முடியாத நிலை இருந்து வருகிறது.
கிராம மக்கள் அவதி
இந்த நிலையில் குண்டூர் கிராமத்தில் கடந்த 3 நாட்களாக ஏற்பட்ட மின்தடையால் அந்த கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை பார்வையிட்டு அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதிய டிரான்ஸ்பார்மர் அமைத்து மின்வினியோகம் வழங்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.