< Back
மாநில செய்திகள்
மூதாட்டியை சாதி பெயரை சொல்லி திட்டிய தந்தை-மகன் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

மூதாட்டியை சாதி பெயரை சொல்லி திட்டிய தந்தை-மகன் கைது

தினத்தந்தி
|
23 Dec 2022 12:15 AM IST

மூதாட்டியை சாதி பெயரை சொல்லி திட்டிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்(வயது 62). விவசாயியான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் பிச்சைப்பிள்ளை(68) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வேலாயுதம் மனைவி பழனியம்மாள் (60) தனது வயலில் விவசாய வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த பிச்சைப்பிள்ளை மற்றும் அவரது மகன் ராஜேந்திரன்(28), மனைவி மலர் கொடி(65), மகள் லட்சியம்(32) ஆகியோர் பழனியம்மாளின் சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேலாயுதம் உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பிச்சைப்பிள்ளை, மகன் ராஜேந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்