< Back
மாநில செய்திகள்
கோழிப்பண்ணையாளருக்கு கொலை மிரட்டல்; தந்தை, மகன் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

கோழிப்பண்ணையாளருக்கு கொலை மிரட்டல்; தந்தை, மகன் கைது

தினத்தந்தி
|
22 Nov 2022 7:29 PM GMT

மோகனூர் அருகே கோழிப்பண்ணையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

மோகனூர்

மோகனூர் அருகே உள்ள பரளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்தையூர் புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). இவர் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இவருக்கும், பக்கத்துக் காட்டை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (60) என்பவருக்கும் பொது பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் பொதுத்தடத்தை சேர்த்து கரை போட்டுள்ளார். இதுகுறித்து பழனிச்சாமி கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த தமிழ்ச்செல்வனின் மகன் தனசேகரன், பழனிசாமியை தகாத வார்த்தையில் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசாமி மோகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வன், தனசேகரன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்