< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தந்தை பெரியார் நினைவு தினம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
|24 Dec 2023 11:31 AM IST
தந்தை பெரியாரின் 50-வது நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை,
தந்தை பெரியாரின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவசிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முதல்-அமைச்சர் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ஆ.ராசா எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெரியார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர்.