< Back
மாநில செய்திகள்
உருவத்தால் மறைந்தாலும் உணர்வால் தமிழ்நாட்டை இயக்கிக் கொண்டிருக்கும் தந்தை பெரியார் - உதயநிதி ஸ்டாலின் டுவீட்
மாநில செய்திகள்

உருவத்தால் மறைந்தாலும் உணர்வால் தமிழ்நாட்டை இயக்கிக் கொண்டிருக்கும் தந்தை பெரியார் - உதயநிதி ஸ்டாலின் டுவீட்

தினத்தந்தி
|
24 Dec 2023 6:36 PM IST

பெரியார் விட்டுச் சென்றுள்ள பணிகளை செய்து முடிக்க உறுதியேற்போம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். .

சென்னை,

தந்தை பெரியாரின் 50-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் உருவசிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்தநிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

அழுத்தப்பட்ட - உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு சுயமரியாதை, இனமான உணர்வூட்டி, தலைநிமி்ர்ந்து நிற்க வைத்த தந்தை பெரியாரின் 50ஆவது நினைவு நாளான இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,சக அமைச்சர் பெருமக்கள் - கழக நிர்வாகிகளோடு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தோம்.

உருவத்தால் மறைந்தாலும் உணர்வால் தமிழ்நாட்டை இயக்கிக் கொண்டிருக்கும் தந்தை பெரியாரின் நினைவினைப் போற்றுவோம்.

பகுத்தறிவையும் மானுடப்பற்றையும் முதன்மையாகக் கொண்டு தொண்டாற்றிய தந்தை பெரியாரை நினைவுகூர்ந்து அவர் விட்டுச் சென்றுள்ள பணிகளை செய்து முடிக்க உறுதியேற்போம்! #Periyar என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்