< Back
மாநில செய்திகள்
மேற்கு தாம்பரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தந்தை பலி; மகன் கண் எதிரே பரிதாபம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

மேற்கு தாம்பரத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தந்தை பலி; மகன் கண் எதிரே பரிதாபம்

தினத்தந்தி
|
10 July 2022 7:09 PM IST

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் மகன் கண் எதிரேயே தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

தந்தை-மகன்

ஆந்திர மாநிலம் பாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிநாதம்(வயது 50). இவருடைய மகன் சிவப்பிரசாத்(22). தற்போது இவர்கள், சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார்கள்.

நேற்று மாலை தந்தை-மகன் இருவரும் மேற்கு தாம்பரத்தில் உள்ள துணிக்கடைக்கு சென்று துணி எடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் துரைப்பாக்கத்தில் உள்ள தங்கள் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

லாரி மோதி பலி

மேற்கு தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தனியார் பள்ளியை கடந்து இருவரும் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

அதில் படுகாயம் அடைந்த முனிநாதம், மகன் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சிவப்பிரசாத், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்