செல்போன் பார்த்ததை கண்டித்த தந்தை... பிளஸ்-2 மாணவி ஆசிட் குடித்து தற்கொலை
|பிரியதர்ஷினி (வயது 16) கூத்தாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டம் மேலராதாநல்லூர் ஊராட்சி வடபாதியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 40). இவருடைய மகள் பிரியதர்ஷினி (வயது 16) கூத்தாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிரியதர்ஷினி பொதுத்தேர்வுக்கு படிக்காமல் நீண்ட நேரம் செல்போன் பார்த்துக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதை அவரது தந்தை மணிமாறன் கண்டித்துள்ளார்.
இதனால் மனவேதனையில் இருந்த பிரியதர்ஷினி, தனது பெற்றோர் வெளியூர் சென்றிருந்தபோது வீட்டில் இருந்த கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பிரியதர்ஷினி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 மாணவி ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.