< Back
மாநில செய்திகள்
குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் தந்தை  தற்கொலை
மாநில செய்திகள்

குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் தந்தை தற்கொலை

தினத்தந்தி
|
17 Jun 2024 2:53 AM IST

பள்ளிக்கட்டணம் செலுத்தாததால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என மனைவி கூறியுள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கொமாரபாளையம் இந்திரா நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது 43). லாரி டிரைவர். இவருடைய மனைவி சுருதி. இவர்களுடைய மகன்கள் சஞ்சய், அஜய். அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சஞ்சய் 6-ம் வகுப்பும், அஜய் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவரிடம் சுருதி, மகன்கள் 2 பேருக்கும் பள்ளி கட்டணம் கட்ட வேண்டும். கட்டணம் செலுத்தாததால் அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார்.

இதைக்கேட்டு வேலுச்சாமி மனவேதனை அடைந்தார். எப்படியாவது பணத்தை கட்ட ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிவிட்டு படுக்கை அறைக்கு சென்றார். பின்னர் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார். அதன்பின்னர் வெகுநேரம் அவர் கதவை திறக்காததால் சுருதி தட்டிப்பார்த்தார். ஆனால் திறக்கவில்லை. இதனால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது வேலுச்சாமி படுக்கை அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தொங்குவது தெரிந்தது.

அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சுருதி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கி கொண்டிருந்த வேலுச்சாமியை மீட்டார். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு வேலுச்சாமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்