< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
|21 Jun 2023 12:15 AM IST
ஆலங்குளம் அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே கீழப்பாவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 45 வயது கூலித்தொழிலாளிக்கு மனைவி மற்றும் 19 வயதில் ஒரு மகள் உள்ளனர். அந்த தொழிலாளிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அவர் தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவி, மகளிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார். சம்பவத்தன்று இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது தாயாரிடம் தெரிவித்து உள்ளார். இதையடுத்து ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்த தொழிலாளியை கைது செய்தனர்.