< Back
மாநில செய்திகள்
இட தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் தந்தை, மகன் படுகாயம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

இட தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் தந்தை, மகன் படுகாயம்

தினத்தந்தி
|
1 Nov 2022 6:13 PM IST

இட தகராறில் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் தந்தை, மகன் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா முனுசாமி நாயுடு கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத் (வயது 45). இவரது மனைவி பார்வதி (38). பிரசாந்தின் தந்தை தாமு (60). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் கண்ணையா (70). இவரது மகன்கள் சங்கர்(44), கேசவுலு (41), மருமகள் நிர்மலா. இவர்கள் 2 குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக இட தகராறு இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை பிரசாத் அவரது மனைவி பார்வதி மற்றும் தந்தை தாமு ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது பக்கத்து வீட்டில் இருக்கும் கண்ணையா இவரது மகன்கள் சங்கர், கேசவுலு மற்றும் நிர்மலா ஆகியோர் பிரசாத் வீட்டுக்குள் புகுந்து அவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை தகாத வார்த்தைகளால் பேசி உருட்டுக்கட்டைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பிரசாத் அவரது தந்தை தாமு ஆகியோர் தலையில் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் உடனடியாக அக்கம்பக்கத்தினர் பள்ளிப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்து பிரசாத் மனைவி பார்வதி பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சங்கர் (44), கேசவுலு (41) ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கண்ணைய்யா, நிர்மலா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்