< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
4 Oct 2023 3:38 AM IST

கும்பகோணம் அருகே ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் நடந்தது.

கும்பகோணம்;

கும்பகோணம் அருகே ரேஷன் கடை கட்ட எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் நடந்தது.

ரேஷன் கடை

கும்பகோணம் அருகே உள்ள முழையூர், இந்திரா நகர் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான மண்டபமும், அதன் பின்புறம் காலி இடமும் உள்ளது. இந்த இடத்தை மண்டபத்தில் விசேஷம் நடைபெறும் போது உணவு சமைப்பதற்காக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மண்டபத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் சிறிய கிடங்குடன் கூடிய ரேஷன் கடை வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

உண்ணாவிரதம்

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு கட்டுமானப் பணி தொடங்கியது. இதையடுத்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலக உதவிப் பொறியாளர் சிவப்பிரகாசம் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதைத்தொடர்ந்து அங்கு நடைபெற்ற கட்டுமானப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்