< Back
மாநில செய்திகள்
பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
6 July 2022 1:13 AM IST

பா.ஜனதா கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் செய்தனர்.

பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் சார்பாக தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நடந்த ேபாராட்டத்துக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஜெய்சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் பஞ்சாட்சரம், அன்பு, வேதநாயகம், தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்கவரதராஜன், தஞ்சை தெற்கு மாவட்ட பார்வையாளர் வக்கீல் முரளி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மருத்துவப்பிரிவு மாநில செயலாளர் டாக்டர் நியூட்டன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் நமசுராஜா, சூரை சண்முகம், முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டுக்கோட்டை நகரதலைவர் செல்வகுமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்