< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
பவானியில் பா.ஜ.க. உண்ணாவிரதம்
|6 July 2022 2:11 AM IST
பவானியில் பா.ஜ.க. உண்ணாவிரதம்
பவானி
பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் ஈரோடு வடக்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கலைவாணி விஜயகுமார் உண்ணாவிரதத்துக்கு தலைமை தாங்கினார். மாநில மகளிரணி துணைத் தலைவர் வித்யா ரமேஷ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சித்தி விநாயகன் மற்றும் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. அரசை கண்டித்து மாநில செயலாளர் மலர்க்கொடி கண்டன உரையாற்றினார். தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர் செல்வகுமார் மத்திய அரசின் சாதனை குறித்து பேசினார். 500-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள்.