< Back
மாநில செய்திகள்
பரமத்திவேலூரில்  மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம்  அதிகாரிகள் பேச்சுவார்த்தை
நாமக்கல்
மாநில செய்திகள்

பரமத்திவேலூரில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

தினத்தந்தி
|
22 Jun 2022 3:44 PM GMT

பரமத்திவேலூரில் மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரத போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

பரமத்திவேலூர்:

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள புதிய கட்டிடத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக அறை தொலைவில் உள்ளதாகவும், அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லை என்றும், முன்பு இயங்கிய இடத்திலேயே அறை எண் 6, 7, 8 தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான அலுவலகத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் சங்க பரமத்திவேலூர் வட்டார செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகம் எதிரே நேற்று காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற பரமத்திவேலூர் தாசில்தார் சிவக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன், இன்ஸ்பெக்டர் வீரம்மாள் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மாற்றுத்திறாளிகள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்