< Back
மாநில செய்திகள்
கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
திருப்பூர்
மாநில செய்திகள்

கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
26 July 2023 10:45 PM IST

கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்

தளி

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்ய எதிர்ப்பு தெரிவித்து உடுமலை அருகே உள்ள பெரியவாளவாடி கிராமத்தில் கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர்.

கைத்தறி

தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழிலாக உள்ள கைத்தறி நெசவு தொழிலை நம்பி ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் நெசவுத் தொழிலின் மூலப்பொருட்களான பட்டுநூல் மற்றும் ஜரிகை போன்றவற்றின் விலை தற்போது ஒதுக்கப்பட்ட சேலை ரகங்கள் அனைத்தும் விசைத்தறிகளில் கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி அதிகமாக தயாரிக்கப்படுவதால் நிலையாக இல்லாமல் ஏற்றம் இறக்கமாக உள்ளது.கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட சேலை ரகங்கள் அனைத்தும் விசைத்தறிகளில்

கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி அதிகமாக தயாரிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கைத்தறி சேலைகளின் விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால்கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிர்த்து வருகின்றனர்.

உண்ணாவிரதம்

இந்த நிலையில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவலியுறுத்தி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் பெரிய வாளவாடியில் நேற்று நடைபெற்றது. அப்போது நெசவாளர்களுக்கு தாலுகா வாரியாக தனி வங்கி ஏற்படுத்த வேண்டும். கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் 1985-ன் கீழ் ஒரு சில தொழில்நுட்ப குறியீடுடன் 11 விசைத்தறியில் உற்பத்தி செய்ய அனுமதிக்க கூடாது. பார்டர் டிசைன் உடன் கூடிய பருத்திச் சேலை, பட்டுச்சேலை, கோராப்பட்டு வேட்டியில் துண்டு, லுங்கி, ஜமக்காளம் மற்றும்

சட்டை துணிகள் உள்ளிட்ட 11 வகை ரகங்கள் கைத்தறிக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதை விசைத்தறிகளில் உற்பத்தி செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் நெசவாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்போது பாரம்பரிய ராட்டை சுற்றி நூல்நூற்றியும் கவனத்தை ஈர்த்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்