< Back
மாநில செய்திகள்
நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம்

தினத்தந்தி
|
21 Aug 2023 12:01 AM IST

ராமநாதபுரத்தில் தி.மு.க. சார்பில் நீட்தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட்தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரத்தில் தி.மு.க. சார்பில் நீட்தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட்தேர்வை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற்றது.

உண்ணாவிரதம்

நீட் தேர்வை திணிக்கும் மத்திய அரசு, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரும் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கும் தமிழக கவர்னரை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் உண்ணாவிரத அறப்போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெற்றது.

இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தினை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது, தமிழகத்திற்கு கவர்னர் தேவையில்லை. அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி. தோல்வி பயம் காரணமாக பாரத பிரதமரின் முகம் கடந்த சில நாட்களாக சோகமாக உள்ளது. இந்தியா கூட்டணியை பார்த்து மோடி மிரண்டு போய் உள்ளார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க. யாரை நிறுத்தினாலும் தி.மு.க.வால் தோற்கடிக்கப்படுவார். மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. மாநாட்டிற்கு அனுமதி அளித்ததும் தி.மு.க. அரசு தான். பா.ஜ.க.வின் கொத்தடிமையாக அ.தி.மு.க. செயல்படுகிறது. தமிழக முதல்வரின் மக்கள் நலத்திட்டங்களால் இந்தியாவே தமிழகத்தை திரும்பி பார்க்கிறது. அந்த அளவிற்கு நாள்தோறும் ஒவ்வொரு திட்டங்களாக நிறைவேற்றி அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், தி.மு.க மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், இளைஞரணி மாநில துணை செயலாளர் இன்பா ரகு, மாவட்ட அமைப்பாளர் சம்பத் ராஜா, மாணவரணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி, மருத்துவர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆசிக் ரஹ்மான், முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், நகர் செயலாளர்கள் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், யூனியன் தலைவர்கள் ராமநாதபுரம் வக்கீல் பிரபாகரன், திருப்புல்லாணி புல்லாணி, மண்டபம் சுப்புலட்சுமி ஜீவானந்தம், மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன், நகர்மன்ற தலைவர்கள் பரமக்குடி சேதுகருணாநிதி, ராமேசுவரம் நாசர்கான், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் எம்.ஏ.எஸ்.முகம்மது அசாருதீன், மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு துணை தலைவர் செய்யது இப்ராகிம், நகர் அமைப்பாளர் நாகூர்கனி, மாவட்ட விவசாய அணி சார்பில் மாநில துணை அமைப்பாளர்கள் நல்ல சேதுபதி, முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், மாவட்ட அமைப்பாளர் அய்யனார், மாவட்ட தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் உப்பூர் கிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் ஆர்.எஸ்.மடை துரை, தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் பகவத்சிங் சேதுபதி, துணை அமைப்பாளர்கள் பரமக்குடி ஜோசப் குழந்தைராஜா, ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகா பிரபு, ராமேசுவரம் நரேஷ்குமார், முகவை அக்பர், ராமநாதபுரம் வசந்தகுமார், முதுகுளத்தூர் கண்ணன், தென்னரசு,

மாவட்ட தி.மு.க. தொண்டர் அணியின் சார்பில் மாவட்ட அமைப்பாளர் பி.டி.ராஜா, மாணவரணி அமைப்பாளர் சுரேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
மேலும் செய்திகள்