< Back
மாநில செய்திகள்
ஆடை வடிவமைப்பாளர் புகார்: பிரபல பாடகர் மீது பாலியல் வழக்கு
மாநில செய்திகள்

ஆடை வடிவமைப்பாளர் புகார்: பிரபல பாடகர் மீது பாலியல் வழக்கு

தினத்தந்தி
|
17 Aug 2022 10:05 AM IST

பிரபல சினிமா பின்னணி பாடகர் ராகுல் ஜெயின் மீது ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் 30 வயது பெண் மும்பை ஓஷிவாரா போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

பிரபல சினிமா பின்னணி பாடகர் ராகுல் ஜெயின். இவர் இந்தியில் பல பாடல்களை பாடி இருக்கிறார். ஜூட்டா கஹின்ஹா, காகஸ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தும் இருக்கிறார். ராகுல் ஜெயின் மீது ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் 30 வயது பெண் மும்பை ஓஷிவாரா போலீசில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

அவரது மனுவில், ''என்னை ராகுல் ஜெயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்பு கொண்டு அவரது தனிப்பட்ட ஆடை வடிவமைப்பாளராக வைத்துக் கொள்வதாகவும், இதற்காக அந்தேரி புறநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் வந்து சந்திக்கும்படியும் அழைத்தார். அவரது வீட்டுக்கு சென்றேன். அங்கு தனது உடைகளை காட்டுவதாக கூறி படுக்கை அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து விட்டார்" என்று கூறியுள்ளார்.

ராகுல் ஜெயின் மீது போலீசார் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். ராகுல் ஜெயின் கூறும்பொது, ''என் மீது பாலியல் புகார் அளித்துள்ள பெண்ணை நான் பார்த்தது இல்லை. என்மீது அவர் சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானவை. ஆதாரமற்றவை" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்