< Back
மாநில செய்திகள்
கரும்பு, மணிலா பயிர் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

கரும்பு, மணிலா பயிர் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை

தினத்தந்தி
|
12 Jun 2022 5:44 PM IST

தச்சம்பட்டு பகுதியில் கரும்பு, மணிலா பயிர் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வாணாபுரம்

வாணாபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தச்சம்பட்டு, வெறையூர், பெருமணம், விருதுவிளங்கினான், சின்னகல்லப்பாடி, பெரிய கல்லப்பாடி, அல்லிகொண்டப்பட்டு, தலையாம்பள்ளம், சதாகுப்பம், பழையனூர் ஆகிய கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.

அந்தப் பகுதியில் நெல், கரும்பு, மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து மற்றும் பருவக் கால பயிராக பூக்கள் ஆகியவற்றை சாகுபடி ெசய்து வருகின்றனர்.

கோடைக்காலம் தொடங்கிய நேரத்தில் அனைத்துக் கிணறுகளிலும் நீர்மட்டம் அதிகளவில் குறைந்ததாலும், பாசனத்துக்கு போதிய தண்ணீர் இல்லாததாலும் கரும்பு பயிர் காய்ந்து கருகி போய் விட்டது.

கோடைமழை பொய்யும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது மழை பெய்யாததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் கரும்பு மட்டுமின்றி மணிலா உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து வருகிறது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்