< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கடலூரில் 300 ஏக்கர் விளைநிலத்தை சூழ்ந்த மழைநீர் - சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
|4 Nov 2022 3:19 PM IST
சிதம்பரம் அருகே சுமார் 300 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
கடலூர்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக சிதம்பரம் அருகே நான்கு கிராமங்களில் சுமார் 300 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். தண்ணீரில் மூழ்கி இருப்பதால் சம்பா பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வேளாண் அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.