< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை... நெற்பயிர்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை
|9 May 2023 1:36 PM IST
திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துவிட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழவேடு, தும்பிக்குளம், பூனிமாங்காடு, அருங்குளம், எஸ்.அக்ரஹாரம், மத்தூர், மாமண்டூர், நெமிலி, திருவாலங்காடு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து, நெற்கதிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் சாய்ந்துவிட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அரசு சேதம் அடைந்த நெற்பயர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.