40 டன் சின்ன வெங்காயத்தை தண்ணீரில் கொட்டிய விவசாயிகள்
|உரிய விலை கிடைக்காததால், 40 டன் சின்னவெங்காயத்தை விவசாயிகள் சாலை ஓரத்திலும், தண்ணீரிலும் கொட்டினர்.
ஓசூர்,
பட்டதாரி வாலிபரான அனில் குமார் என்பவர் ஓசூர் அருகே ஐந்து ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயத்தை பயிரிட்டார். அவரது உறவினரான ரமேஷ் என்பவர் இரண்டு ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயத்தை பயிரிட்டார்.
50 கிலோ கொண்ட சின்ன வெங்காயம் மூட்டைக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனையானது. இவர்கள் 7 ஏக்கரில் பயிரிட்டு அறுவடை செய்த சமயத்தில் சின்ன வெங்காயம் உரிய விலை இன்றி கானப்பட்டது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் குடோனில் சின்னவெங்காயத்தை தேக்கிவைத்துள்ளனர்.
தற்போது வரையிலும் மிகவும் குறைவான விலைக்கே சின்னவெங்காயம் கேட்கப்பட்டதாலும், மழை காரணமாக வெங்காயம் முளைத்ததன் காரணத்தினாலும் அவர்கள் வேதனைக்கு ஆளாகினர்.
இந்த நிலையில் சேமிப்புக்கிடங்கில் வைத்திருந்த 40 டன் அளவுள்ள சின்னவெங்காய மூட்டைகளை சாலை ஓரங்களிலும், தண்ணீரிலும் கொட்டினர். அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.