< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்; கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்; கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
21 Jun 2022 12:02 PM IST

காஞ்சீபுரத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் வேளாண் அறிவியல் வல்லூனர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். ஆகவே, விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். கூட்டம் நடைபெறும் அன்றைய தினம் பிரதான் மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டத்தில் இணைய வழி பதிவுகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்