< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலகங்களில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - நாளை நடக்கிறது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர், திருத்தணி, பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலகங்களில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் - நாளை நடக்கிறது

தினத்தந்தி
|
23 Jun 2022 1:50 PM IST

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜமாபந்தி வருவாய் ஆர்.டி.ஓ. மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்று வரும் காரணத்தினால் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருகிற 1-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று மாவட்ட அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் வருவாய் கோட்ட அளவில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் வருவாய் ஆர்.டி.ஓ. தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு கான அந்தந்த வருவாய் கோட்டங்களிலும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறார்கள். வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் தலைமையில் வருகிற 1-ந்தேதி நடைபெறும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்