< Back
மாநில செய்திகள்
முக்கொம்பு மேலணையில் காவிரி தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்
மாநில செய்திகள்

முக்கொம்பு மேலணையில் காவிரி தண்ணீரை வரவேற்ற விவசாயிகள்

தினத்தந்தி
|
27 May 2022 5:55 PM IST

முக்கொம்பு மேலணைக்கு வந்த காவிரி தண்ணீரை விவசாயிகள் நெல்மணிகளையும், மலர்களையும் தூவி வரவேற்று உற்சாகத்தில் மகிழ்ந்தனர்.

திருச்சி:

மேட்டூரில் இருந்து கடந்த 24-ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், வழியாக திருச்சி மாவட்ட எல்லையான பேட்டவாய்த்தலை காவிரி ஆற்று பகுதிக்கு இன்று காலை7.40 மணி அளவில் வந்தடைந்தது.

அங்கிருந்து சிறுகமணி, பெருகமணி வழியாக திருப்பராய்த்துறை வழியாக தண்ணீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. அதனை தொடர்ந்து அங்கு ஒன்றுகூடிய திருச்சி மாவட்ட விவசாய சங்க செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் ஒன்றுகூடினர்.

அப்போது தண்ணீர் வருவதை பார்த்து சந்தோஷத்தில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி, கரிகாலன் சோழன் சிலைக்கும், காவிரித்தாய் சிலைக்கும் மாலை அணிவித்தனர். பின்னர் முக்கொம்பு மேலணையில் இலை விரித்து அதில் நெல்மணிகள், பூக்கள் வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி பின்னர் நெல்மணிகளையும், மலர்களையும் தூவி காவிரியில் தண்ணீரை வரவேற்று உற்சாகத்தில் மகிழ்ந்தனர்.

பின்னர் ஜீயபுரம், கம்பரசம்பேட்டை தடுப்பனை வழியாக கல்லனை நோக்கி தண்ணீர் சென்றது. இன்று காலை நிலவரப்படி1000 கன அடி தண்ணீர் வெளியேறியது.

Related Tags :
மேலும் செய்திகள்