தஞ்சாவூர்
கருப்பு சின்னம் அணிந்து பங்கேற்ற விவசாயிகள்
|சம்பா பயிர் பாதிப்புக்கு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கருப்பு சின்னம் அணிந்து விவசாயிகள் பங்கேற்றனர்.
தஞ்சாவூர்;
சம்பா பயிர் பாதிப்புக்கு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி தஞ்சையில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கருப்பு சின்னம் அணிந்து விவசாயிகள் பங்கேற்றனர்.
கருப்பு சின்னத்துடன் வந்த விவசாயிகள்
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற ஓரிருவரை தவிர விவசாயிகள் அனைவரும் சட்டையில் கருப்பு சின்னம் அணிந்து இருந்தனர்.இந்த நூதன போராட்டம் குறித்து விவசாயிகள் கூறும்போது, கடந்த 2022-23-ம் ஆண்டு சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் பயிர் காப்பீட்டு தொகையை செலுத்தி இருந்தனர்.
சம்பா நெல் சோதனை அறுவடையும் நடந்தது.பருவம் தவறிய மழையால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. அந்த மகசூல் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களை கடந்தும் இதுவரை இழப்பீட்டு தொகை அறிவிக்கப்படாமல் இருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பிரதமரின் பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் விதிகளின்படி இழப்பீடு வழங்காமல் இருக்கிறது. இதை கண்டிப்பதுடன் 12 சதவீத வட்டியுடன் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும்.
தற்போது நடந்து வரும் குறுவைக்கான பயிர்க்காப்பீட்டு திட்டத்திற்கு காப்பீட்டு நிறுவனங்கள் முன்வராத நிலையில் தமிழ்நாடு அரசே காப்பீட்டு நிறுவனத்தை தொடங்கி செயல்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தான் கருப்பு சின்னம் அணிந்து கூட்டத்தில் பங்கேற்றோம் என்றனர்.