< Back
மாநில செய்திகள்
மின் கட்டண உயர்வை ரத்து செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
10 Sept 2022 11:56 PM IST

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாக குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் அம்பலராசு தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் இந்திரஜித், தேசிய செயற்குழு உறுப்பினர் மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் மின்சார கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கனவான காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்