< Back
மாநில செய்திகள்
விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
17 Feb 2023 12:30 AM IST

நிலக்கோட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நிலக்கோட்டை பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், அம்மையநாயக்கனூர் போலீஸ்நிலையம் முன்பு விஷம் குடித்து இறந்த கன்னிமார் நகரை சேர்ந்த விவசாயி பாண்டி குடும்பத்துக்கு அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். பாண்டி இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.

பின்னர் நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக தாலுகா அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த அதிகாரிகளிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தனர்.

மேலும் செய்திகள்